Saturday, August 8, 2009

கேழ்வரகு இனிப்பு இட்லி

கேழ்வரகு இனிப்பு இட்லி உடலுக்கு உகந்தது. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இத்தனை தினமும் செய்து சாப்பிடலாம்.

தேவையானவை:
கேழ்வரகு மாவு : 2 கப்
பால் : ஒரு கப்
பொடித்த வெல்லம் : 3/4 அல்லது ஒரு கப்
தேங்காய் துருவல் : ஒரு கப்
முந்திரி பருப்பு : 10
உலர்ந்த திராட்சை : ஒரு டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி : 1/2 டீ ஸ்பூன்
நெய் : 2 டீ ஸ்பூன்

செய்முறை:
வெல்லத்தை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்
கேழ்வரகு மாவு, தேங்காய் துருவல், பால், ஏலக்காய் பொடி ஆகியவற்றை ஒரு பத்திரத்தில் ஒன்றாக போட்டு அதில் கரைத்து வைத்துள்ள வெல்லத்தை உற்றி கலக்கவும்.

முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை ஆகியவற்றை சற்று நெய்யில் வறுத்து மாவில் சேர்க்கவும்.
மாவை இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும். மாவு கெட்டியாக இருந்தால் சிறிது பாலை சேர்த்து கரைத்துக் கொள்ளுங்கள்.
இட்லி தட்டில் நெய் தடவி மாவை அதில் உற்றி, இட்லி பானையில் வைத்து பத்து நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
கேழ்வரகு இனிப்பு இட்லி ரெடி

0 comments:

Post a Comment